மரணம் உன்னை அழைத்திடும்
தூரத்திலேதான் உள்ளது - அதை
மரணப் படுக்கையிலும்
மறந்திடாதே மனிதா
அதனைக் குறித்த திகதி
அவன் கைவசமிருக்கிறது
கருத்துவேறுபாடுள்ள விடையத்தில்
தலையை நுழைத்துக்கொண்டு
கைகலப்பும் ஆகிவிடுகிறார்கள்
அதை மறந்து விட்டு
அந்த நாளை மறந்தே விட்டயா..?
உலக ஆசையும் களியாட்டமும்
உன்னை ஈர்த்துக்கொண்டதா..?
நாட்டுநடப்புகளாலையே
மண்டையில் நறை விழுகிறது
இரத்தக்களரிகள்
இதயத்தை சூழ்கிறது
இன்நிமிடம் என்னவாகுமோ..?
உன்கதைகேப்பார் யாரோ..?
இனிய பொழுதுகள் இறந்துபோகுமே..!
இனி என்ன செய்யப்போகிறாய்..?
நீ வாழ்ந்த வாழ்கை எங்கே..?
நீ சம்பாதித்தவைகள் எங்கே..?
நீ கோனாய் இருந்தபோது
உன்முன் கூனி நின்றவன்கூட
நீ கட்டையாய் கிடக்கும்போது
நெஞ்சை விரித்துக்கேட்பான்
ஏனின்னும் தூக்கவில்லையென்று
பொருளிலும் பொன்னிலும்
வெறுப்புகள் வரும்முன்னே
கடந்த வாழ்க்கையை நினைத்துப்பார்
மீதியுள்ள வாழ்கையை சிந்தித்துப்பார்
உன்னைப்படுக்க வைத்து
நாளுபேர் தொழும்நாள் வரும்முன்
உனக்காய்த் தொழுதுகொள்..!
நாளைய நாட்கள்
உனக்காய் காத்திருக்கிறது..!
அது சுட்டெரிக்கும் நெருப்பா..?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா..?
அதன் அடித்தளத்தின் நெருப்பு புதிது
உலகை கருகிடச்செய்யும் வல்லமையதற்கு
நிஜங்களை உன்முன் நிறுத்தி
போலிகளைக் களைந்தெரிந்துவிடு
நீ அந்த நாளை அடையும்போது
நிச்சியமாய் கதறியழுவாய் - அப்போது
உன் கண்ணீர்த்துளிளென்ன
அவைகளை அனைத்துவிடுமா..?
மரணத்துக்காய் உன் தசைகள்
ரணமாய்த் துடிக்கும்முன்
ஒரு முறை நன்றாய் அழுதுவிடு..